சரும நிறத்தை மேம்படுத்த சில எளிய அழகு குறிப்புகள்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சரும நிறத்தை மேம்படுத்த சில எளிய அழகு குறிப்புகள்!

 பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு  போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இயற்கையான  முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களால்தான் எந்தவித பாதிப்பு இல்லை என்பது உண்மையான விஷயம்.

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம். தக்காளியை நன்றாக பிசைந்து  அதனோடு 4 அல்லது 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

 
முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2-3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம்  பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

About ஈழ தீபம்