வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தேர்தல்களின் போது வாக்களிக்க சந்தர்ப்பம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தேர்தல்களின் போது வாக்களிக்க சந்தர்ப்பம்

 


வௌிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதிஅமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவிக்கிறார். 

எதிர்வரும் தேர்தல்களின் போது முன்னோடி வேலைத்திட்டமாக இதனை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னோடி வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் யோசனைகளை தமது அமைச்சினூடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்பித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

வௌிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கான முறைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் தொடர்ந்தும்  கலந்துரையாடல்கள் நடைபெறும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.

About ஈழ தீபம்