தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான 'தேரே இஷ்க் மேன்' திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் இருவரது திரைப்பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான 'பீரியட் ஆக்ஷன் ரொமான்ஸ்' கதைகளத்தை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உணர்வுப்பூர்வமான காதல் கதைகளை இயக்குவதில் வல்லவரான ஆனந்த் எல் ராய், முதன்முறையாக தனுஷை வைத்து ஒரு வரலாற்று பின்னணியிலான ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் மிகப்பிரம்மாண்டமான செலவில், எபிக் கேன்வாஸில் உருவாக்கப்பட உள்ளது. இக்கூட்டணியின் முந்தைய படங்களான ரஞ்சனா, அத்ரங்கி ரே மற்றும் தேரே இஷ்க் மேன் ஆகிய படங்கள் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, இந்த புதிய முயற்சி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
