கலால்வரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப்பணியகத்தின் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஒளடதங்கள் உற்பத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், சட்டவிரோத இயந்திரங்கள் ஊடாக கஞ்சா அரைத்தமை கண்டறியப்பட்ட நிலையில் அதற்காக சட்டத்தை அமுல்படுத்தாமல் சந்தேகநபர் 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
