திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்



 மட்டக்களப்பு நகர், பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறிய சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குறித்த வீட்டில், இன்று காலை வழமைபோல நீர்த்தொட்டியை நிரப்புவதற்காக நீர் இறைக்கும் இயந்திரத்தை (Water Pump) இயக்கியபோது, தண்ணீர் நீல நிறத்தில் இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கிணற்றிலிருந்து வாளி மூலம் நீரை எடுத்துச் சோதித்தபோது அது நீல நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் கிணற்றை எட்டிப் பார்த்தபோதும் உள்ளே இருந்த நீர் நீல நிறமாகவே காட்சியளித்ததைக் கண்டு அவர் வியப்படைந்தார். 

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

About ஈழ தீபம்