பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(23) நள்ளிரவு முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதற்காக மேலதிக 80 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சங்க வீரசூரிய தெரிவித்தார்.
