ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

 

புத்தளம் - குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 03 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 

போதைப்பொருளுக்கு எதிரான 'யுக்திய' விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபர் கொழும்பு செல்வதற்காக பஸ்ஸில் ஏறிய போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

இதன்போது, சந்தேக நபரை மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸார் பதில் நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

 

பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்ற பதில் நீதிவான் சந்தேக நபரை மூன்று நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

About ஈழ தீபம்