இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை; புதுச்சேரியில் சாலைகள் வெள்ளக்காடானது! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை; புதுச்சேரியில் சாலைகள் வெள்ளக்காடானது!

 புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள ஜவகர் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார்.

 

புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

 


மழை காரணமாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை, பூங்காக்கள், நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.




About UPDATE