வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி!


வாகன விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்று (04) இரவு இந்த விபத்து சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் லொறி அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது மகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்துள்ளார். கட்டுகெந்த தங்கொடுவ பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

About ஈழ தீபம்