அனைத்துப்போட்டியாளர்களின் எதிர்ப்பைப் பெற்ற பிக் பாஸ் 6ம் சீசன் போட்டியாளர்... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அனைத்துப்போட்டியாளர்களின் எதிர்ப்பைப் பெற்ற பிக் பாஸ் 6ம் சீசன் போட்டியாளர்...


 

தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் அஸீம் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து வருகிறார். இந்த வாரம் அரச குடும்பம் டாஸ்கில் அவருக்கு தளபதி வேடம் கொடுக்கப்பட்டது. 



அதில் அவர் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி பேசியது தற்போது அவருக்கு இருக்கும் கெட்ட பெயரை மோசமாக்கி இருக்கிறது என சொல்லலாம். நேற்று சனிக்கிழமை எபிசோடில் கமல் அவரை பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை எபிசோடிலாவது அவர் பேசுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பிக் பாஸ் 6ல் இருந்து இந்த வாரம் யார் எலிமிநேஷன் என்பது பற்றி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேச இருக்கிறார். 

நாமிநேஷன் லிஸ்டில் அஸீம் மற்றும் நிவாஷினி ஆகிய இருவர் மட்டும் கடைசியில் இருக்கின்றனர். அப்போது அஸீம் தான் வெளியேற்றப்பட வேண்டும் என விக்ரமன் உள்ளிட்ட மொத்த போட்டியாளர்களும் சொல்கின்றனர். ஆனால் கமல் கையில் கார்டை எடுத்து காட்டி நிவாஷினி தான் வெளியேற்றப்பட்டதாக கூறுகிறார். 

About UPDATE