சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவைகள்.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவைகள்....

train
புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் சிறப்பு தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்தச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் தொடருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

About Unknown