வவுனியாவில் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வவுனியாவில் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்குள்ளான தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் தப்பியோட முற்பட்ட சமயத்தில் நடத்துனர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் பாடசாலையின் சுற்றுமதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown