இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...



இலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

About Unknown