தவறை ஏற்றுக்கொண்டார் மார்க் சக்கர்பேர்க் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தவறை ஏற்றுக்கொண்டார் மார்க் சக்கர்பேர்க்

Image result for facebook mark zuckerbergபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
Cambridge Analytica என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதிவில் மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் “மிகவும் வருந்துவதாகவும்” “நேர்மையற்ற செயலிகளுக்கு” எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் தொடர்பில் அனைத்து பொறுப்புகளும் தனக்கு உண்டெனவும் அதன் ஸ்தாபகர் மார்க் சர்க்கர்பேர்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

About Unknown