.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.!

Image result for சேதமான நாணயத்தாள்கள் இலங்கைசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
எனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால் உடனடியாக அருகிலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும்.

About Unknown