எனது பெற்றோரின் அன்பை களங்கப்படுத்தாதீர்கள் ; பிறந்தநாளில் ஸ்ரீதேவியின் மகள் உருக்கம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எனது பெற்றோரின் அன்பை களங்கப்படுத்தாதீர்கள் ; பிறந்தநாளில் ஸ்ரீதேவியின் மகள் உருக்கம்

Related imageஎன் பெற்றோர்களின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள் என ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கமான கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளன்று அம்மாவின் அன்பு குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 
நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ஆம் திகதி டுபாயில் உறவினரின் திருமண வைபவத்திற்கு சென்ற சமயத்தில் காலமானார். இது இந்திய மக்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளில் தனது தாயின் நினைவுகளை சமூக ஊடகத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
என்னுடைய பிறந்தநாளில் நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டும் தான். அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்.
என் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன்.
அம்மா என்னை கவலை மற்றும் வலியிலிருந்து நீங்கள் பாதுகாத்து வந்தது எனக்கு தெரியும். உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன். அதே எண்ணத்தில் இனி ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண்விழிப்பேன். உங்கள் நினைவுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாதென்று குறிப்பிட்டுள்ளார்.

About Unknown