மன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின

Related imageமன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை  பெய்த  மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
 குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள  வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படும் என தெரிய வருகின்றது. 

About Unknown