கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!

Image result for maithiripalaநாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 
குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கண்டி - திகன, தெல்தேனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையை அடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

About Unknown