மீண்டுமொரு துப்பாகிச் சூடு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மீண்டுமொரு துப்பாகிச் சூடு

Image result for துப்பாகிச் சூடுஅத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 அதுருகிரிய கல்வருசாவ என்ற பிரதேசத்தில் நேற்று பக ல் குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாதோர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான  சமயன் என்பவரின் பிரதான சகாவான கடுவல, புவக்தெனிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நிமல் சிறி பெரேரா ( பொடிசுது ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 
இந்நிலையில், கொழும்பு - ஆமர் வீதியில் நேற்று  முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown