பாகிஸ்தானுக்கு பறக்கும் ஜனாதிபதி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாகிஸ்தானுக்கு பறக்கும் ஜனாதிபதி

Related imageஇருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு செல்கின்றார். பாகிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால செல்கின்றார்.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்றதன் பின்னர் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுப்பட உள்ளார். குறிப்பாக இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாட உள்ளார். 
புதிய முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் இதன்போது பரந்தளவில் கலந்துரையாட உள்ளார். எவ்வாறாயினும் ஜப்பான் நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தான் நாட்டு அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் குடியரசு தினத்தில் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

About Unknown