மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மின்கம்பத்தில் மோதி பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மின்கம்பத்தில் மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
 ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஐயூப்கான் அம்ஸாத் அலி என்ற இளைஞரே மின்மாற்றி பொருத்தப்பட்ட மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, 
புதன்கிழமை நள்ளிரவு வேளையில் இவர் மோட்டார் சைக்கிளில் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.
காயமடைந்தவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பயனின்றி இன்று வியாழக்கிழமை பகல் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown