ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி

Image result for ஐரோப்பாவில் கடும் குளிஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
 பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து ஐரோப்பாவிலுள்ள வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை இரத்துச் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது
 இது வரை குளிர்கால காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது அதில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில்  பெரும்பாலானோர் வீதிகளில் உறங்குபவர்களாவர்.
 இந்நிலையில், அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

About Unknown