படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 2 வயது மகனை அடித்துக் கொன்ற கொடூரத் தாய்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 2 வயது மகனை அடித்துக் கொன்ற கொடூரத் தாய்!

அமெரிக்கா - தெற்கு டகோடா மாகாணத்தில் பெற்ற குழந்தையை தாய் ஒருவர்  கடந்த 2016ஆம் ஆண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். 
வீட்டு படுக்கையில் தனது 2 வயது மகன்  சிறுநீர் கழித்ததால் ஆத்திரப்பட்ட 30 வயதான தாய் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் இடுப்புப் பட்டியால் அடித்ததுடன் கையாலும் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான 2 வயது குழுந்தை  மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடலில் 70% காயம் இருந்தமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாயை  கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மகனை அடிக்கும் போது தான் மது அருந்தியிருந்ததாக சந்தேக நபரான குழுந்தையின் தாய்  நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
குழுந்தையின் தாய் குற்றத்தை முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Unknown