சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் லண்டன் சிட்டி விமான நிலையம் மூடல்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் லண்டன் சிட்டி விமான நிலையம் மூடல்!!!

Related imageஇங்கிலாந்து தலைநகர் லண்டனில்  உள்ள தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் வெடிகுண்டு இன்னும் செயலில் இருப்பது தெரியவந்தது. 
வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
 இதனால் 16000 விமானப்பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர். வெடிகுண்டை கைப்பற்றிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாதவகையில் அதை செயலிழக்கச் செய்தனர்.
இதனையடுத்து லண்டன் விமானநிலைய ஓடுப்பாதைகளில்  அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

About Unknown