தென்னாபிரிக்கஜனாதிபதியை பதவி விலக கோரிக்கை!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தென்னாபிரிக்கஜனாதிபதியை பதவி விலக கோரிக்கை!!!

Image result for ஜகோப் ஷுமாவைதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை பதவி விலக வேண்டுமென்று ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் முறையாக இன்று கோரிக்கை விடுக்கவுள்ளது.
இருப்பினும் பதவி விலகலை ஷுமா ஏற்றுக்கொள்வாரா? என்பது தொடர்பாகத் தெளிவாகத் தெரியவில்லையெனவும் சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகக் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துவரும் 75 வயதான ஷுமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
 இந்நிலையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி ஷுமா நீக்கப்பட்டதுடன் அக்கட்சிக்குப் புதிய தலைவராக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்து ஷுமாவை விலக்குவதற்கான அழுத்தம் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் அதிகரிகத்துக் காணப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக  ஷுமா மறுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ஷுமாவின் பதவி விலகல் தொடர்பாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அதன் திட்டத்தை இதுவரையில் வெளியிடவில்லையெனவும் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

About Unknown