ஆட்சியே சரியில்லை...நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் : நடிகர் கமல்ஹாசன் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஆட்சியே சரியில்லை...நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் : நடிகர் கமல்ஹாசன்

Image result for kamal haasanஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமாவை தெரியும், ஆனால் எனது கொள்கை தெரியாது என்றார். தனது கொள்கை தெரிந்த பிறகு தான் கூட்டணி குறித்து சீமான் முடிவு செய்ய வேண்டும் என கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் அதிமுக தலைவர்களை சந்திக்க மாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

சீமான் பேட்டி:

கமலின் அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தேன் என ஆழ்வார்பேட்டையில் கமலை சந்தித்த பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மேலும் கமல் வந்து என்னைச் சந்திப்பதை விட நான் சென்று கமலைச் சந்திப்பதே பண்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். ஊழலை ஒவ்வொரு மனிதனும் உணரும்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என சீமான் கூறியுள்ளார். 

கமல் அழைப்பு:
புதுயுகம் படைக்க மதுரை வருமாறு பொதுமக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் கட்சிக் கொடி ஏற்றி, கட்சியின் கொள்கையை விளக்குவேன் என்றும் தமது நெடும்பயணம் நாளை துவங்க உள்ளதாகவும் டுவிட்டரில் கமல்ஹாசன் செய்தி வெளியிட்டுள்ளார்.

About Unknown