ஹொங்கொங் பேருந்து விபத்தில் 18 பேர் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஹொங்கொங் பேருந்து விபத்தில் 18 பேர் பலி

ஹொங்கொங்கில் இடம்பெற்ற இரட்டை அடுக்குப் பேருந்து விபத்தில் பதினெட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் ஐம்பது பேர் காயமடைந்தனர்.
 குதிரைப் பந்தயம் ஒன்றைக் காண வந்திருந்தவர்கள் மற்றும் பணியாளர்கள் சிலரை ஏற்றிச் சென்றபோது, ‘நியூ டெரிடரி’ என்ற பகுதியில், வேகமாகத் திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கவிழ்ந்து விழுந்த பேருந்தில் இருந்து சிலர் தாமாகவே வெளியேறியபோதும் பெரும்பாலானவர்கள் பேருந்தில் சிக்கியிருந்தனர். தீயணைப்புப் படையினர் வந்தே அவர்களை மீட்டனர்.
ஹொங்கொங்கில் பேருந்து விபத்துக்கள் அரிதானவை என்பதுடன், குறித்த பேருந்தின் சாரதி அனுபவம் வாய்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Unknown