பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து பல்கலைக்கழகங்கள் கல்விசாரா ஊழியர்கள் இன்று, நாளை ஆகிய இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்காக 15 அரச பல்கலைக்கழகங்களதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்வரும் உயர் கல்வி நிறுவனங்களது 15000 இற்கும் அதிக ஊழியர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெறவிருந்த கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

About Unknown