சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Related imageசமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 
நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆன்மீக பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிபெறச்செய்வது சவால் நிறைந்தது என்றபோதும் பல்வேறு துறைகளினூடாக அதற்கு ஊக்கமளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். 
நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியீடு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட 'மூவர்' திரைப்பட வெளியீடு நேற்று   கொழும்பு ரீகல் திரையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

About Unknown