கலப்பு முறை தேர்தல் - ஆய்வு ; வெளிநாட்டுக்குழு இலங்கை வருகை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கலப்பு முறை தேர்தல் - ஆய்வு ; வெளிநாட்டுக்குழு இலங்கை வருகை

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். 
இலங்கைக்கு வருகைதந்துள்ள குழுவினர் தேர்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய அதிகாரிகளாவர்.
இந்தியாவிலிருந்து 4 பேரும் , தென்கொரியாவிலிருந்து 2 பேரும் , மாலைதீவிலிருந்து 2 பேரும் இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும் வருகைதந்துள்ளனர். 
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவினர், வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வர்.
இதையடுத்து, தேர்தல் குறித்த ஆய்வு அறிக்கைகளை தமது நாட்டிற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையார் மேலும்  தெரிவித்தார்.

About Unknown