இத்தாலியில் புகலிட கோரிக்கையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இத்தாலியில் புகலிட கோரிக்கையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Image result for இத்தாலிஇத்தாலியில் புகலிட கோரிக்கையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இத்தாலியின் வலதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவரால் கடந்த வாரம் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் அடுத்த மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பிலான பிரச்சினை முக்கிய இடத்தை வகிக்குமெனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

About Unknown