வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

Related imageவாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அறிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரங்களில் முதலாவது பெறுபேற்றை வெளியிட முடியும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் மட்டுமன்றி, ஏனைய சில மாவட்டங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்திருப்பதாக தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் எம்எம்மொஹமட் தெரிவித்தார்.
வாக்களிப்பு வீதங்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டங்களிலேயே அவை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும். பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளன.
தபால் மூலம் அளிக்க்பபட்ட வாக்குகள் மற்றும் மத்திய நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் சில மத்திய நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி மன்ற வட்டார வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் மாவட்டரீதியிலான வாக்குகள் அறிவிக்கப்படுமென தெரிவித்தார்.

About Unknown