பப்புவா நியூ கினியா தீவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பப்புவா நியூ கினியா தீவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம்

Image result for பப்புவா நியூ கினியாபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 6:48 மணியளவில்  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வனிமோ நகரிலிருந்து சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Unknown