இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் உயிரிழப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலிஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாவா தீவில் உள்ள சுபாங் எனும் மலைப் பகுதியை சுற்றிப்பார்க்கச் சென்ற 40 பேரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் பயணித்த பேருந்து மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது.
இதனால், ஓட்டுநர் பேருந்தைத் திடீரென நிறுத்த முற்பட்ட வேளையில், பேருந்து கவிழ்ந்து மலையிலிருந்து உருண்டு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 27 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Unknown