நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடு பறிமுதல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடு பறிமுதல்

Image result for ஷாருக்கானின்மும்பை,: மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் உள்ள நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். இதனை தீர்ப்பாயம் உறுதி செய்த பின்னர் ஷாருக்கான் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் உள்ள தால் என்ற இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடு உள்ளது. 20,000 சதுர மீட்டர் அளவு கொண்ட இந்த பண்ணையில் தனியார் கடற்கரையும் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேடும் உள்ளது. இந்த நிலம் முதலில் இரண்டு பேரின் பெயர்களில் இருந்தன. 2005ம் ஆண்டு ஷாருக்கானின் மாமா, மாமியார், மைத்துணி மற்றும் உள்ளூரை சேர்ந்த மனோகர் அஸ்காவ்கர் ஆகியோர் பெயர்களில் மாற்றப்பட்டது. இதன் மதிப்பு 14 கோடியாகும்.

பண்ணை வீட்டை வாங்குவதற்கு வசதியாக ஷாருக்கான் சம்பந்தப்பட்டவர்களுக்கு 8.4 கோடி கடனாக வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலம் விவசாய நிலமாகும். மகாராஷ்டிராவில், சட்டப்படி விவசாய நிலத்தை விவசாயி ஒருவருக்குத்தான் விற்க வேண்டும். இந்த நிலத்தை விவசாய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயி அல்லாத ஒருவருக்கு விற்க வேண்டும் எனில் கலெக்டர் அல்லது மாநில அரசின் ஒப்புதல் பெற்ற அதிகாரியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதியை பெறாமலேயே ஷாருக்கான் இந்த நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் அதில் ஒரு பங்களாவை அவர் கட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

About Unknown