இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

Image result for இராஜகிரிய மேம்பாலம்புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் சற்று நேரத்திற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக இராஜகிரிய பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும் வகையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.
குறித்த மேம்பாலமானது, 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்.

About Unknown