தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் அநீதி குறித்து கல்வியமைச்சில் முறையிடலாம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் அநீதி குறித்து கல்வியமைச்சில் முறையிடலாம்


Related image
முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதில் ஏதேனும் அநீதி இடம்பெறுமாயின் அது தொடர்பில் கல்வியமைச்சு அல்லது மாகாண கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்ய முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அநீதி இடம்பெறுமாயின் முதல்கட்டமாக குறித்த பாடசாலையில் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது திருப்திகரமான பதில் வழங்கப்படாவிடின் கல்வியமைச்சு மற்றும் மாகாண கல்வியமைச்சில் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் பெயர்பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் விசேட பிரிவின் உதவியை பெறவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

About Unknown