வறட்சியின் போது உணவு உற்பத்தி தொடர்பில் ஆராய நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வறட்சியின் போது உணவு உற்பத்தி தொடர்பில் ஆராய நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை

Related imageநாட்டில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலைக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான திட்டங்களை செயற்படுத்த நிபுணர் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த நிபுணர் குழுவினர் வறட்சி காலநிலையின் போது விவசாய மற்றும் உணவு உற்பத்திகள் தொடர்பில் திட்டங்கள் வகுப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டத்தினை விரைவுப்படுத்துவதுடன் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என என ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் 2018 இற்கான திட்டமிடல்கள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

About Unknown