முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் இன்று  இடம்பெற்ற முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் மன்னார் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்து 30 நிமிடங்கள் கடந்த போதிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தராமையினால் வவுனியா - மன்னார் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Unknown