குளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு பிரான்ஸில் சம்பவம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

குளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு பிரான்ஸில் சம்பவம்

Image result for கர்ப்பினி பெண் .இறப்பு


பிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              பிரான்ஸில் Grenoble என்ற பகுதியில் கணவருடன் வசித்து வந்த பெண். குறித்த நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் கதவை பல முறை தட்டியபோதும் மனைவி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
அப்போது அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலை காணப்பட்டுள்ளார். இதனால் விரைவாக தனது மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளார். 
வைத்தியசாலையில் கர்ப்பினி பெண்னை பரிசோதித்த வைத்தியர்கள் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கர்ப்பிணி  மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது கைப்பேசி சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்  இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அப்பெண்  இறந்திருக்கலாம் என பொலிஸார் தங்களது விசாரணைகளின் முடிவில் தெரிவிக்கின்றனர்.

About Unknown