ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு

Related imageநடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர் என்னவென மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தான் தொடங்கவுள்ள கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்த ரஜினி, அதற்காக புதிய இணையத்தள முகவரி ஒன்றையும் அறிவித்தார்.
இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து, பதிவு செய்து வருகின்றனர். இதுவரையில் 50 இலட்சம் பேர் இணையத்தளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பாமர மக்கள் இப்போதும் செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் அவர்களுக்கு ‘மொபைல் செயலி’களை அவ்வளவு எளிதாக தெளிவு படுத்த முடியாது எனவும் இணையத்தளம் வழியாக உறுப்பினர்களை சேர்ப்பதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 22,000 பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30,000 மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த மன்றங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் தொடங்கப்பட்டவையாகும்.

About Unknown