20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனதாக நடிகர் கமல்ஹாசன் காட்டம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனதாக நடிகர் கமல்ஹாசன் காட்டம்


சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது என்றும், முதல்வர் முதல் அமைச்சர் வரை ஒவ்வொருவரும் கச்சிதமாக பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது என்று கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சுயமாக வளர்ந்த சுயேட்சை ரூ.20,000 தந்து ஒவ்வொரு ஓட்டுக்கும் விலை நிர்ணயித்தார் என்று குற்றம் சாட்டிய கமல், அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை அழுத்திவிட்டார்கள் வாக்காளர்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனதாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனது பிச்சை எடுப்பது போன்றது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.

About Unknown