எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்கா கெடுபிடி : IT துறையில் 6 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்கா கெடுபிடி : IT துறையில் 6 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்

Related image

வாஷிங்டன்: எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்கா கெடுபிடி செய்து வருவதால் 5 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உதவும் கிரீன்கார்டு வரும் வரை எச்1பி விசாவை நீட்டித்து அங்கு வசிக்கலாம் என்ற வழக்கமான நடைமுறைக்கு டிரம்ப் அரசு செக் வைத்துள்ளது. அங்கு பணிபுரியும் மற்றும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டினர் தற்காலிகமாக எச்1பி விசாவை நீட்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அமெரிக்காவில் 6 ஆண்டுகள் பணிபுரிந்த வெளிநாட்டினர் கிரீன்கார்டு உடனே கிடைக்காவிட்டால் சொந்த நாட்டிற்கு திரும்பி விட வேண்டும். பின்னர் கிரீன்கார்டு கிடைத்தால் மட்டுமே அமெரிக்காவுக்கு திரும்ப முடியும். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தலைமை அமைப்பான நாஸ்காம்
இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்னும் சில வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆண்டு தோறும்  தற்காலிக குடியேற்றத்திற்காக அமெரிக்கா வழங்கும் 85,000 எச்1பி விசாக்களை பெறுவோரில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

About Unknown