நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்


Image result for vikram father



நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் நேற்று (31-12-2017) மாலை, சென்னையில் மரணமடைந்தார். இவர் கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாகவும், திருப்பாச்சி படத்தில் விஜயின் தந்தையாகவும் நடித்துள்ளார்.

பரமக்குடியில் பிறந்த இவர், சினிமாவில் நடிக்கும் கனவோடு சென்னை வந்தார். ஆனால், சினிமாவில் பெரிய வெற்றியடைய முடியாத நிலையில், தன் மகன் விக்ரமை சிறு வயதில் இருந்தே நடிகனாக உருவாக்கினார். விக்ரமுக்கும் சினிமா வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பின்னர் பல திரைப்படங்களிலும் நடித்த விக்ரமுக்கு இயக்குனர் பாலாவின் 'சேது' திரைப்படம் மூலம் தான் முதல் வெற்றி கிடைத்தது. அவரின் கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்து உத்வேகமளித்தவர் அவரது தந்தை வினோத் ராஜ்.
                            
வினோத் ராஜ் - ராஜேஸ்வரி தம்பதிக்கு நடிகர் விக்ரமைத் தவிர அரவிந்த் என்ற மகனும் அனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜனுக்கு நெருங்கிய உறவினர்கள். சமீபத்தில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞரின் கொள்ளுப்பேரனும் 'கெவின் கேர்' ரங்கநாதனின் மகனுமான மனு ரஞ்சித்திற்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

About Unknown