மன்னார் பெரிய கருசல் பகுதியில் மாணவி உயிரிழப்பு! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மன்னார் பெரிய கருசல் பகுதியில் மாணவி உயிரிழப்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் கருசல் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் 10 வயதுடைய ஜிப்ரி பாத்திமா றிஸ்னா என்பவரே உயிரிழந்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து கருசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

About UK TAMIL NEWS