பெண் அமைச்சர்கள் கர்ப்பம் தரிக்க மஹிந்தவே காரணம்? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பெண் அமைச்சர்கள் கர்ப்பம் தரிக்க மஹிந்தவே காரணம்?

பெண் அமைச்சர்கள் கர்ப்பம் தரித்தாலும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என்று நல்லாட்சி அரசாங்கம் காரணம் கூறும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த அளவுக்கு அனைத்து செயற்பாடுகளையும் மஹிந்த ராஜபக்சவின் மீது சுமத்தும் கைவித்தைகளை நல்லாட்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்த 4ஆவது மக்கள் கூட்டம் நேற்றைய தினம் திருகோணமலையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

About UK TAMIL NEWS