மர்ம மரணம்.. சிவகார்த்திகேயனை நெருங்கும் போலீசார்… அதிர்ச்சியில் திரையுலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மர்ம மரணம்.. சிவகார்த்திகேயனை நெருங்கும் போலீசார்… அதிர்ச்சியில் திரையுலம்

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தென் இந்திய சினிமாக்களில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை நடித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
திருச்சியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் ஆறுமுகம். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக ஆறுமுகம் வேலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டின் அருகே இருந்த கல்குவாரி ஒன்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி போலீசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த சடலம் தோட்ட தொழிலாளி ஆறுமுகம் தான் என்றும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற தகவல் தற்போதுவரை தெரியவில்லை. இதனிடையே போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

About UK TAMIL NEWS