ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட ராணுவத்தில் திருநங்கைகள் சேரும் திட்டம் ஆறு மாதகாலம் ஒத்திவைப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட ராணுவத்தில் திருநங்கைகள் சேரும் திட்டம் ஆறு மாதகாலம் ஒத்திவைப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடந்தாண்டு அந்நாட்டு ராணுவத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். பலராலும் வரவேற்க்கப்பட்ட இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுகள் வரை ஆகலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப்-ன் நிர்வாகம் இந்த திட்டத்தை முடக்கும் நோக்குடன், திருநங்கைகளை ராணுவத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்களை விநியோகம் செய்வதை ஆறு மாதகாலம் ஒத்திவைத்துள்ளது. இதற்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டீஸ் பிறப்பித்துள்ளதாக பெண்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவு ராணுவத்தில் பணிபுரியும் கனவுடன் இருந்த திருநங்கைகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆயிரக்கணக்கான
திருநங்கைகள் இதற்கான பயிற்சிகளை எடுத்துவரும் போது அரசு இப்படி அறிவித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

About UK TAMIL NEWS