"நீ வெளியே போனா இதுதான் நடக்கும்" - தொடர்ந்து நாடகமாடும் ஜூலிக்கு ஓவியா கொடுத்த பதிலடி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

"நீ வெளியே போனா இதுதான் நடக்கும்" - தொடர்ந்து நாடகமாடும் ஜூலிக்கு ஓவியா கொடுத்த பதிலடி

ஓவியா தான் என்னை தூண்டிவிட்டார் என ஜூலி சொன்ன ஒரு பொய், நடிகை ஓவியாவை மற்றவர்கள் புறக்கணித்து எதிரி போல பார்க்க வைத்துவிட்டது.
ஆனால்  கமல்ஹாசன் உண்மையில் நடந்த காட்சியை அனைவருக்கும் போட்டு காட்டி ஜூலியின் முகத்திரையை கிழித்தார். இதற்கு பெயர் என்ன தெரியுமா "hallucination" என கமல் திட்டிய பிறகு பிறகு "நான் மெண்டலா அக்கா?" என கதறி அழுதார் ஜூலி.
இன்று ஓவியா தானாக சென்று ஜூலியிடம் "நீ ஒரு சாரி மட்டும் சொல்லு.. நாம் பிரென்ட்ஸா இருப்போம்" என பெருந்தன்மையாக கூறினார்.
ஆனால் ஜூலியோ, "ஒரு 5 செகண்ட் முன்னாடி footage மட்டும் காட்ட சொல்லுங்க" என தொடர்ந்து அழுது நாடகமாடி வருகிறார். "நான் பேசினதை எடிட் செஞ்சிட்டாங்க" எனவும் பிக் பாஸ் குழு மீது குற்றம் சாட்டுகிறார்.
இதை பார்த்து கடுப்பான ஓவியா, "நீ பொய் மேல பொய் சொல்லியிருக்க ஜூலி, வெளியே போனா ஆளுங்க காரி துப்புவாங்க" என ஜூலியிடமே நேரடியாக கூறிவிட்டார்.

About UK TAMIL NEWS