’மிஸ் லங்கா’ அழகுராணிப் போட்டிக்குச் சென்ற பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

’மிஸ் லங்கா’ அழகுராணிப் போட்டிக்குச் சென்ற பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்!

கொழும்பில் அழகுராணி போட்டிக்குச் சென்ற பெண் ஒருவர் திருட்டுச் சம்பவத்துக்காக கைது செய்யப்பட்டு விழக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ’மிஸ் லங்கா’ போட்டிக்குத் தெரிவாகும் நோக்கில் கொழும்புக்குச் சென்ற சத்துரிக்கா என்ற யுவதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வருடாவருடம் நடந்துவரும் இலங்கையின் Miss Lanka தெரிவுப்போட்டியானது ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் நேர்முகத்தேர்வுடன் நடந்துவரும் நிலையில் நேற்றைய தினமும் போட்டிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற பெண்ணொருவர் இன்னொரு பெண்ணின் முப்பத்தெட்டாயிரம் ரூபா பெறுமதியான கைபேசி ஒன்றைத் திருடியுள்ளார்.
பின்னர் கையும் மெய்யுமாக பிடிபட்டு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்றையதினம் பொலிஸார் இவரை கோட்டை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். சம்பவம்குறித்து தெரிந்துகொண்ட நீதிபதி, குறித்த பெண்ணை எதிர்வரும் ஓகஸ்டு மாதம் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS